இலங்கையிலும் பன்றிகாய்ச்சல் பரவியிருக்கின்றது. இதன் காரணமாக பாடசாலைகளிலும் விடிமுறை வளங்கப்பட்டிருக்கிரது.
இந்நோயினால் கண்டியில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதைபற்றி தமிழ் ஜெர்னலில் இருந்து திரட்டிய தகவல் கீழே..கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான இளைஞர் மரணமானமைக்கு பன்றிக்காச்சல் நோய்த் தொற்றே காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தொற்று காரணமாக இலங்கையில் மரணமான முதலாவது நோயாளி இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 30 ஆம் திகதியன்று கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த புதன் கிழமை இரவு உயிரிழந்தார்.
அதன் பின்னர் அவரின் உடல்பாகங்கள் மருத்துவ ஆராச்சிக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதேவேளை, மரணமான இளைஞரின் தாய் தந்தையர் இருவரும் மருத்துவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்றிக் காச்சலுக்கு உள்ளானவர் இயற்கையிலேயே நுரைஈரல் மற்றும் முதுகெலும்பு என்பன பலவீனமானவராக இருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அதிகாரிகள், இவருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதை, சோதனை மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களில் 115 பேர் பன்றிக்காச்சல் தொற்றுக்கு உள்ளானவர்கள்; என்பது விமான நிலைய பரிசோதனைகள் மூலம் தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பன்றிக்காச்சல் தொற்றுத் தொடர்பாக மருத்துவ நிபுணர்கள், மக்களுக்கு அடிப்படை அறிவூட்டல் ஒன்றை வழங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment