Showing posts with label புகைப்படக்கள். Show all posts
Showing posts with label புகைப்படக்கள். Show all posts

Wednesday, April 21, 2010

இலங்கையின் 14ஆவது பிரதமராக தி.மு ஜயரட்ன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவருமான டி.எம்.ஜயரட்ன, இலங்கையின் 14ஆவது பிரதமராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

பிரதமர் பதவி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, பசில் ராஜபக்ஷ ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்த போதிலும், இன்று சுபநேரத்தில் திமு என அழைக்கப்படும் டி.எம். ஜயரட்ன பிரதமராகப் பதவியேற்றிருக்கின்றார்.

அலரி மாளிகையில் முன்னாள் பிரதமர், புதிதாக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரசியல் பிரமுகர்கள் இதன்போது வருகை தந்திருந்தனர்.

திசாநாயக்க முதியான்சலாகே ஜயரட்ன, 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி பிறந்தார். கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜயரட்ன 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றார்.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் நடந்த ஆறாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, கால்நடை அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்து வந்தவராவார்.


கண்டி மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்.


கண்டி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 339819 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 192798 வாக்குகளையும் ஜனநாயக தேசிய முன்னணி 23728 வாக்குகளையும் பெற்றுள்ளன.

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 8 ஆசனங்களும் ஐ.தே.கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றி பெற்றோர் விபரம் 



ஐக்கிய தேசிய கட்சியில்  வெற்றி பெற்றோர் விபரம்

கண்டி மாவட்டத்தில் 85 ஆயிரம் தமிழ் வாக்குகள் உள்ள போதும் ஆளுங்கட்சியிலும் ஐக்கிய தேசிய கட்சியிலும் போட்டியிட்ட எந்தவொரு தமிழ் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. ஆனால் கண்டிமாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் வாக்குகளைக்கொண்ட முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நான்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் இந்தக்கட்சியில் போட்டியிட்ட இராஜரட்ணமும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட மதியுகராஜாவும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் பைசர் முஸதபா 20 ஆயிரம் முஸ்லிம் அல்லாதவர்களின் வாக்குகளாலும் நாவலப்பிட்டிய மீள்வாக்களிப்பில் முஸ்லிம் மக்கள் வழங்கிய பெரும் ஆதரவாலும் வெற்றி பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


மேலும் தேசிய பட்டியலில் தெரிவானோர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 17 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ரட்ணசிறி விக்கிரமநாயக்க, டி.எம்.ஜெயரத்ன, டளஸ் அழகபெரும, ஜீ.எல்.பீரிஸ், டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண,கீதாஞ்சன குணவர்த்தன, வண.எல்லாவள மேதானந்ததேரர், முத்து சிவலிங்கம், அச்சல ஜாகொட, விநாயகமூர்த்தி முரளீதரன்,ஜே.ஆர்.பி.சூரியபெரும, ஜனக பண்டார, பேராசிரியர்.ராஜிவ் விஜயசிங்க, ஏ.எச்.எம்.அஸ்வர், மாலினி பொன்சேகா, கமல் ரணதுங்க ஆகியோர் ஐ.ம.சு.மு. தேசிய பட்டியல் உறுப்பினர்களாவர்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.ஐ.தே.க. சார்பில் 9 பேர் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ஹர்ஷ டி சில்வா, ஏர்ன் விக்கிரமரத்ன, டி.எம்.சுவாமிநாதன், ஆர்.யோகராஜன், அனோமா கமகே, ஹசன் அலி, சலீம் மொஹமட் ஆகியோர் ஐ.தே.க தேசிய பட்டியல் உறுப்பினர்களாவர்.

அத்துடன் ஜனநாயக தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக அநுர குமார திஸாநாயக்க , டிரான் அலஸ் ஆகியோரும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினராக எம்.சுமந்திரனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Monday, November 9, 2009

அரபியர்களை போன்று வாகனம் ஓட்ட முடியுமா???





Friday, November 6, 2009

பிரதான பாதையை கடக்கும் விமானநிலையம் ஸ்பெயினில்......

நாம் எவ்வலவோ விமானநிலையங்களை பார்த்திரிக்கின்றோம். ஆனால் வித்தியாசமான அருமையனயான விமானநிலையம் ஸ்பெயினில் உள்ள கிப்ரல்டேர் (gibralter )   விமனநிலயமாகும். இது வாகனக்கள் செள்ளக்குடிய பிரதான பாதையை கடக்கும் விதத்தில் அமைந்துள்ளது.  விமானங்கள் தரையிறங்கும் போது பிரதான   பாதையின் இரு புறமும் மூடப்படும்.


இதோ உங்களுக்காக சில புகைப்படங்கள்.... 










Wednesday, November 4, 2009

உலகிலுள்ள சில துறைமுகங்களின் ஒரு கண்ணோட்டம்....



ஒரு நாட்டினுடைய வளர்ச்சி தங்கியிருப்பது அந்த நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியிலேயே. இந்த பொருளாதர வளர்ச்சியை ஒரு நாடு அடைவ்துற்குரிய ஏற்றுமதி , இறக்குமதி சார்த்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அன்னாட்டினுடைய துறைமுகங்களே பெரும் பங்கு வகிக்கின்றன.

உலகின் சிலநாடுகளுடைய துறைமுக்களை புகைப்படத்துடன் உங்களுடன் பகிர்துகொல்கிறேன்....

அழகிய வடிவில் காணப்படும் இத்துறைமுகம் பிரித்தானியாவில் ச்லோவேல்லி கிராமத்தில் உள்ள தினி(tiny)  என்றழைக்கப்படும் துறைமுகமாகும்.


இயற்கை எழிலுடன் அருமையாக காட்சிதரும் இத்துறைமுகம் இத்தாலியில் அன்காப்ரி  கிராமத்தில் உள்ள கபறி(Capri)   என்றழைக்கப்படும் துறைமுகமாகும்.



செயற்கையுடன் கூடிய இயற்கையாக காட்சிதரும்  இத்துறைமுகம் ஆஸ்திரேலியாவில் சிட்னி  நகரில்  உள்ள போர்ட் ஜாக்சன்   என்றழைக்கப்படும் துறைமுகமாகும்.


இயற்கையுடன் எளிமையாக காட்சிதரும்  இத்துறைமுகம் இந்தியயவில்  விஷிஞ்சம்( Vizhinjam ) நகரில்  உள்ள  விஷிஞ்சம்( Vizhinjam )  துறைமுகமாகும்.


என்ன இதுவும் இயற்கையுடன் எளிமையாக காட்சிதரும்  இத்துறைமுகம் இலங்கையில்   காலி  நகரில்  உள்ள  காலி துறைமுகமாகும்.




என்ன உலகில் எவ்வலவோ துறைமுகங்கள் இருக்கையில் இவன் என்ன ஒருசிலதை வழங்கியுள்ளேன் என்று புலம்புவது என்னக்கு புரிகின்றது...

இன்னும் பல  துறைமுகங்கள் மிக விரைவில்.....

Tuesday, November 3, 2009

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்...



மனிதனாக பிறந்த   ஒவ்வொருவருக்கும் ஆசைகள் பல்வேறுவிதமாக இருக்கும். அனால் ஆசைகள் பல்வேருவிய்தமாக இருந்தாலும் மனிதனுடைய தேவைகள் எல்லாம் ஒரேவிதமாகவே இருக்கின்றன. உணவு, உடை, வீடு என்பன மனிதனுடைய அத்தியாவசிய தேவையாக இருக்கின்றன. உணவுக்காக பல்வேறு நாடுகளில் உள்ளமக்கள் எவ்வளவு செலவழிக்கின்றார்கள் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..


ஜெர்மனி-Bargteheide  : மேலேண்டேர் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு : 375.39 Euros or $500.07



அமெரிக்க- கிழக்கு கரோலினா:ரேவிஸ் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு :$341.98



இத்தாலி- சிசிலி : மன்சூ  குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு :214.36 Euros or $260.11



மெக்சிகோ-கிஎர்ணவக்கா :  கசலேஸ் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு:,862.78 Mexican Pesos or $189.09


போலந்து -கொன்ச்டன்சின் ஜெஜிஒர்ன : சொப்ச்ழ்ய்ந்ச்சி குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: 582.48 Zlotys or $151.27



எகிப்து -கிரோ : அஹ்மத் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: 387.85 Egyptian Pounds or $68.53



எகிஅடோர்(Ecuador )-டிங்கோ:ஆயமே குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு:  $31.55



பூட்டான்-ஷிங்க்தே  கிராமம்:நமகே குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு:  224.93 ngultrum or $5.03



சாத்(Chad:)- ப்றேஇட்ஜிங் முகாம் : அபூபக்கர் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: 685 CFA Francs or $1.23



இதைப்பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்களும் பதியுங்கள்....

Monday, November 2, 2009

பல்ல்வேறு நாடுகளிலுள்ள போலீஸ் தினைகலங்களில் உள்ள கார்கள்....

ஜேர்மன் போலீஸ் கார் மணித்தியாலத்திற்கு 320  கிலோமீட்டர்கள்



ஜப்பான் போலீஸ் கார் மணித்தியாலத்திற்கு 280  கிலோமீட்டர்கள்




பிரான்ஸ்  போலீஸ் கார் மணித்தியாலத்திற்கு 280  கிலோமீட்டர்கள்






ஸ்பெயின்  போலீஸ் கார் மணித்தியாலத்திற்கு 280  கிலோமீட்டர்கள்


இங்கிலாந்து   போலீஸ் கார்.. அந்த வேகத்தை சொல்லவேண்டுமா???



இந்திய   போலீஸ் கார் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டர்கள்...................................




இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் வெளியிடவில்லை..

நன்றி.
FUN  AND  FUNNY ONLY.