Wednesday, April 21, 2010

கண்டி மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்.


கண்டி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 339819 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 192798 வாக்குகளையும் ஜனநாயக தேசிய முன்னணி 23728 வாக்குகளையும் பெற்றுள்ளன.

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 8 ஆசனங்களும் ஐ.தே.கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றி பெற்றோர் விபரம் 



ஐக்கிய தேசிய கட்சியில்  வெற்றி பெற்றோர் விபரம்

கண்டி மாவட்டத்தில் 85 ஆயிரம் தமிழ் வாக்குகள் உள்ள போதும் ஆளுங்கட்சியிலும் ஐக்கிய தேசிய கட்சியிலும் போட்டியிட்ட எந்தவொரு தமிழ் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. ஆனால் கண்டிமாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் வாக்குகளைக்கொண்ட முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நான்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் இந்தக்கட்சியில் போட்டியிட்ட இராஜரட்ணமும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட மதியுகராஜாவும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் பைசர் முஸதபா 20 ஆயிரம் முஸ்லிம் அல்லாதவர்களின் வாக்குகளாலும் நாவலப்பிட்டிய மீள்வாக்களிப்பில் முஸ்லிம் மக்கள் வழங்கிய பெரும் ஆதரவாலும் வெற்றி பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


மேலும் தேசிய பட்டியலில் தெரிவானோர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 17 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ரட்ணசிறி விக்கிரமநாயக்க, டி.எம்.ஜெயரத்ன, டளஸ் அழகபெரும, ஜீ.எல்.பீரிஸ், டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண,கீதாஞ்சன குணவர்த்தன, வண.எல்லாவள மேதானந்ததேரர், முத்து சிவலிங்கம், அச்சல ஜாகொட, விநாயகமூர்த்தி முரளீதரன்,ஜே.ஆர்.பி.சூரியபெரும, ஜனக பண்டார, பேராசிரியர்.ராஜிவ் விஜயசிங்க, ஏ.எச்.எம்.அஸ்வர், மாலினி பொன்சேகா, கமல் ரணதுங்க ஆகியோர் ஐ.ம.சு.மு. தேசிய பட்டியல் உறுப்பினர்களாவர்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.ஐ.தே.க. சார்பில் 9 பேர் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ஹர்ஷ டி சில்வா, ஏர்ன் விக்கிரமரத்ன, டி.எம்.சுவாமிநாதன், ஆர்.யோகராஜன், அனோமா கமகே, ஹசன் அலி, சலீம் மொஹமட் ஆகியோர் ஐ.தே.க தேசிய பட்டியல் உறுப்பினர்களாவர்.

அத்துடன் ஜனநாயக தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக அநுர குமார திஸாநாயக்க , டிரான் அலஸ் ஆகியோரும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினராக எம்.சுமந்திரனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment