வளர்ந்து விழும்
நரைத்த முடிகள்...
மடிப்புகளை
அடிக்கிக்கொண்ட
நெற்றிச் சுருக்கங்கள்...
துரத்துப் பார்வையில்
இருட்டிப் போன
பூ விழுந்த கண்கள்...
பொக்கைவாய் சிரிப்பில்
குழி விழுந்து போன
கன்னங்கள்...
கேட்டும்
திரும்பிப் பார்த்திடாத
பயனற்ற செவிகள்...
போர்த்திய தோலில்
எட்டிப்பார்க்கும்
வலுவிழந்த எலும்புகள்...
சோர்வுச் சிறைதனில்
குடி கொண்டிருக்கும்
மெலிந்த தேகம்...
இன்னும்
தளர்ந்த இருகால் நடையில்
சேர்ந்து கொண்டது மூன்றாவது காலும்
ஆனாலும் அதே
நினைவில் இன்னும்
ஓடிக்கொடிருக்கும்௦-
மாற்றமில்லாத
நித்திய ஜீவனே
உன் நினைவுகள்...
No comments:
Post a Comment