இலங்கை கிரிக்கெட் அணியினர் சாதனை படைப்பதில் வல்லவர்கள் , டெஸ்ட் , ஒருநாள் , இருபதுக்கு20 போட்டிகளில் அதிகூடிய ஓட்ட்கள்
பெற்ற அணி இலங்கை அணி மாத்திரமே .டெஸ்டில் 1997 ஆம் ஆண்டு ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்ற 952 என்ற ஓட்ட எண்ணிக்கையே டெஸ்டில் அதிகூடிய ஓட்டக்களாக அசைக்க முடியாத சாதனையாக இன்றும் காணப்படுகின்றது.
பெற்ற அணி இலங்கை அணி மாத்திரமே .டெஸ்டில் 1997 ஆம் ஆண்டு ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்ற 952 என்ற ஓட்ட எண்ணிக்கையே டெஸ்டில் அதிகூடிய ஓட்டக்களாக அசைக்க முடியாத சாதனையாக இன்றும் காணப்படுகின்றது.
இதில் முதல் துடுபெடுத்தாடிய இந்திய அணி முதல் இனிக்சில் 537 ஓட்டங்களை பெற்றது. இதில் நோவ்ஜோத் சிங் சிடு 111 , ராகுல் டிராவிட் 69 , அசாருதீன் 126 , சச்சின் டெண்டுல்கர் 143 ஓட்டக்களை பெற்றனர். கிரிக் இன்போ ஸ்கோர் போர்டு இதோ...
பதிலுக்கு ஆடிய இலங்கை அணியில் மறவன் அதபது முதல் டெஸ்டில் ஆடிய சுழல் பந்து வீச்சாளர் குல்கர்னியின் கன்னி விக்கட்டாக 26 ஓட்டக்களுக்கு ஆட்டமிழக்க ஆடுகளம் நுழைந்த ரோஷன் மகாநாம , ஜெயசூரிய ஜோடி கொடுத்தது இந்திய அணிக்கு தலைவலியை கொடுத்தது. டெஸ்டில் இரண்டாவது விக்கெட்டுக்காக பெற்ற அதிகூடிய ஜோடி சாதனையையும் இவர்கள் பெற்றனர். மகாநாம 225 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க ஜோடி சேர்த்தது ஜெயசூரிய அரவிந்த ஜோடிகள் , ஜெயசூரிய, அரவிந்த , அர்ஜுன ரணதுங்க முறையே 340 ,126 , 86 ஓட்டங்களை பெற்றனர். தந்து கன்னி டெஸ்டில் விளையாடிய மகேள ஜெயவர்தன 66 ஓட்டங்களை பெற்றார். இறுதியாக இலங்கை அணி 952 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இதுவே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி பெற்ற கூடுதலாந ஓட்டமாகும். இதற்கு முன் 1938 இல் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி பெற்ற 907 எண்ணிக்கையே குடுதலான ஓட்டமாக காணப்பட்டது.
இந்த டெஸ்டில் மொத்தமாக நான்கு இனிக்சில் இரண்டு இனிங்க்ஸ் மாத்திரமே ஆடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் ஒருநாள் சர்வதேச அதிகூடிய ஓட்டம் கண்ணோட்டம் அடுத்த பதிவில்...
.
.
.
.
Edhu enna velai unmai unarvugal vanoli endru sollivittu edhedho vanoligali tharugireergale ungalal sondhamaga oru vanoli oliparappu seyya mudiyaadha
ReplyDelete