Monday, May 14, 2012

Face Book ???




அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே,

இன்றைக்கு Facebook இல் நமது சகோதரர்கள் செய்யும் அட்டகாசம் ஒன்றல்ல இரண்டல்ல இந்த facebook ஆனது நமது சமுதாயத்தில் கூடுதலான மக்களின் இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும் தொலைத்து கொண்டிரிக்கிறது அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் நமக்கு சில வரம்புகளை நமக்கு போட்டுள்ளார்கள் அதில் பலவற்றை நாம் facebook இல் மீறி கொண்டிருக்கின்றோம் அதாவது நபி அவர்கள் ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டும், ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் எப்படி பழக வேண்டும் என்பதை கூட நமக்கு காட்டி தந்துள்ளார்கள். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் நமக்கு எத்தனையோ பாடங்களை படிக்க முடியும் . ஆனால் நமது சகோதரர்கள் இரவு ஒரு மணிவரைக்கும் facebook இரிக்கின்றார்கள். இவர்கள் சுபஹ் தொழுவது கிடையாது அவர்களின் கண்களுக்கு அவர்கள் ஒய்வு கொடுப்பது கிடையாது இதனால் இவர்களின் நிலைமை என்னவென்றால் இந்த உலகத்திலே அவர்கள் பார்வையை இழந்து நஷ்டமடைய போகிறார்கள் மற்றும் அல்லாஹ்விடத்திலும் இதக்கு பதில் சொல்லவும் வேண்டி இருக்கிறது . நபி அவர்கள் கூறுகிறார்கள். 

“என் வழியை யார் கை விடுகிறாரோ அவர் என்னைசர்ந்தவர் அல்லர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), (நூல் புஹாரி: 5063)

இன்றைக்கு facebook எதக்கு பயன்படுத்த படுகிறது என்றால் அது முழுக்க முழுக்க பாலியல் சீர்கேடுதான் யாராவது ஒருவர் ஒரு சினிமா நடிகையின் போட்டோவை post பண்ணினால் போதும் எல்லோருடைய கவனமும் அந்த போட்டோவில் தான் இரிகின்றது. அந்த போட்டோவுக்கு command எழுதுவதும் அதை share பண்ணுவதும் தான் அவர்களின் வேலையாக இருந்து கொண்டிரிக்கிறது நாம் share பன்னுவதக்கு எத்தனை நல்ல விசயங்கள் இருந்தாலும் அதை செய்வதில்லை உதாரணமாக நபிகளாரின் ஒரு பொன் மொழியை post பண்ணினால் அதை ஒரு சிலர் மட்டும்தான் share பன்ணுகிறார்கள் இதே போலே ஒரு சினிமா நடிகை அல்லது தேவை இல்லாத ஒரு ஆபாச போட்டோவை post பண்ணினால் போதும் அது பலரிடத்தில் சென்று அதக்கு எல்லாரும் command அடிப்பதும் அதை like பன்னுவதுமாக இரிகின்றது அதிலும் சிலர் வெட்கம் இல்லாமல் சில ஆபாச வார்த்தைகளையும் கூட எழுதுக்கிரார்கள்

அல்லாஹ் தனது திருமறையில் எச்சரிக்கின்றான்.....

“வெட்ககேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (24:19)


நமது சகோதரர்கள் இன்றைக்கும் செய்யும் மிகவும் மோசமான ஒரு நாச வேலைதான் பெண்களின் பெயரில் பொய்யான account ஒன்றை திறந்து அதில் தேவை இல்லாத செய்திகள் ஆபாச படங்களை post பண்ணுகிறார்கள் மற்றும் இந்த மாதிரியான account களில் 5000 மேலே நண்பர்கள் இருப்பதை பார்க்கலாம். அதிலும் எல்லோருடைய பெயரை பார்த்தாலும் பாத்திமா என்று ஆரம்பிக்கிறது அதனுடன் ஒரு துணை பெயரும் இரிக்கின்றது. நமது நபி அவர்களின் மகள் பாத்திமாவின் ஒழுக்கமும் சிறந்த, நடைமுறையும் நம்மால் இன்றைக்கு கூடுதலான பெண்ணிடத்தில் பார்க்க முடியாமல் இரிக்கின்றது நபி அவர்களின் நேரடி கண்காணிப்பில் வளர்ந்த ஒரு சிறந்த பெண் மணி அதனால் தான் பாத்திமா என்ற பெயரில் கூட ஒரு இனிப்பு இருக்கிறது அனால் இன்றைக்கு பாத்திமா என்ற பெயர் தான் facebook இல் தேவை இல்லாத விசயதிக்கு பயன்படுத்த படுகிறது.


நீங்கள் உண்மையாக இஸ்லாமிய சகோதரர்கள் என்றால் இந்த நாச செயலை இன்றைக்கு நிறுத்துங்கள் நீங்கள் இப்படி செய்வது எதை உணர்த்துகிறது என்பதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா??? இஸ்லாம் மார்க்கம் ஒழுக்கத்தை சொல்லகூடிய ஒரு சிறந்த மார்க்கம், ஒழுக்கம் என்பது இஸ்லாத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது ஆனால் நீங்கள் செய்யும் இந்த நாச செயலானது நமது சமுதாய சகோதரிகளுக்கு கொடுக்கும் அவமானமாகும் இன்றைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள் இவர்கள் உங்களை பார்த்து விட்டு இஸ்லாத்தை நோக்கி வரவில்லை அவர்கள் அல் குர்ஆனை படிக்கிறார்கள் பின்னர் இதுதான் சரியான மார்க்கம் என்று தெரிந்து கொண்டு இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள் இப்படி வருபவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார்கள் காரணம் இவர்கள் இந்த மார்க்கத்தின் பெறுமதியை புரிந்து கொண்டு வந்தவர்கள் ஆனால் நாம் என்ன செய்கிறோம்?? நமக்கு இந்த மார்க்கம் மிகவும் இலகுவாக கிடைத்து விட்டது அதனால் தான் இந்த சத்திய மார்க்கத்தின் பெறுமதி உங்களுக்கு புரிய வில்லை இதனால் தான் நீங்கள் வரம்பு மீறி நடக்கிறீர்கள், நீங்கள் செய்யும் இந்த நாச வேலையானது இந்த மார்க்கத்திக்கு கூட கெட்ட பெயரை கொடுக்கிறது. அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பது இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் நரக வேதனையை நீங்கள் ருசிக்க விரும்புரீர்களா?? நரக நெருப்பு நீங்கள் நினைப்பது போல சாதாரண விசயம் இல்லை அல்லாஹ் நரகத்தை அல் குர்ஆனில் பல இடங்களில் எப்படி வர்ணிக்கிறான் என்பதை நான் உங்களுக்கு நினவூட்டுகிறேன்.


நமது சமுதாய மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டியது என்னவென்றால் இந்த சினிமா காரர்கள் நமக்கு எதை போதிக்கிறார்கள் இவர்களால் நமது சமுதயதிக்கு என்ன லாபம்? அவர்கள் உங்களுக்கு உலக நல்ல விசயங்களை போதிக்கிறார்களா? மார்க்க விசயங்களை போதிக்கிறார்களா? அல்லது அறிவை வளர்க கூடிய நல்ல விசயங்களை போதிக்கிறார்களா? அல்லது சமூக சேவை செய்கிறார்களா, ஒழுக்க விசயங்கலையா உங்களுக்கு போதிக்கிறார்கள் என்றால் முழுக்க முழுக்க அவை ஒன்றும் கிடையாது இவர்கள் காட்டுவது எல்லாம் ஆண்களும் பெண்களும் அறையும் குறையுமாக ஆடை அணிந்து கூத்தடிப்பதை காட்டுகிறார்கள் மற்றும் படுக்கை அறையை காடுகிறார்கள் அல்லது ஒருவன் நூறு பேருக்கு அடிப்பதை காடுகிறார்கள் இப்படிப்பட்ட அசிங்கமான சினிமா காரர்களுக்கு தான் இன்றைய சமுதாயத்தில் சிறந்த வரவேற்பு இருக்கிறது இவர்களுடைய போடோக்களை தான் facebook இல் கூடுதலாக பார்க்க முடிகிறது. நாம் இதிலிருந்து எதை விளங்க வேண்டும்? ஒரு மனிதனுக்கும் மிருகதிக்கும் உள்ள வித்தியாசங்களில் ஒன்றுதான் ஆடை, இந்த சினிமா காரர்கள் ஆடையை அறையும் குறையுமாக அணிகிறார்கள் இன்னும் சிலர் மிருகங்கள் (நாய் இன்னொரு நாயுடன்) எப்படி சாலை ஓரங்களில் நமது தேவையை நிறைவேற்றுமோ அதை விட மிக மோசமான முறையில் ஒரு ஆணுடன் ஒரு பெண் முழுமையாக ஆடைகளை அவிழ்த்து விட்டு உறவாடுவதை காடுகிறார்கள் அதைதான் நீங்கள் facebook இல் post பன்னுகிறீர்கள், நீங்கள் இப்படி post பண்ணும் போது உங்களுடைய சகோதரர்களும் பார்கிறார்கள் மற்றும் பெண்கள் பார்கிறார்கள் சிறுவர்கள் பார்கிறார்கள், நல்லவர்கள் படித்தவர்கள் ஒழுக்கமுள்ள பென்கள் பார்கிறார்கள். நீங்கள் மிகவும் இலகுவாக post பண்ணி இருப்பீர்கள் ஆனால் இது எத்தனை பேரின்கைக்கு போகிறது. இதை பார்த்து விட்டு ஒரு பெண் அல்லது ஒரு ஆண் தவரிபோனால் அதக்கு நீங்கள் தான் பொறுப்பு என்பதை மறந்து விடாதீர்கள் இதனால் ஏட்படும் சகல தீய விசயங்களுக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பு சொல்ல வேண்டி இருக்கிறது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இதைபற்றி நபி அவர்கள் கூறுகையில்... 

“யார் இஸ்லாத்தில் ஒரு அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதக்குரிய நன்மையும் அவருக்கு பின் அதன் படி செயல் படுபவர்களின் நன்மையும் உண்டு; அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது. யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்கு பின் அதன்படி செயல் படுபவர்களின் பாவமும் உண்டு அவர்களின் பாவத்திலிரிந்து எதுவும் குறைத்து விடாது”

அறிவிப்பவர்: ஜாரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல் முஸ்லிம்: 1848

ஆகவே அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே நடந்த தவறுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுங்கள்

6 comments:

  1. You just need to have a mobile device along with a good internet connection.কলকাতা ফতাফত

    ReplyDelete
  2. Outstanding Good for you Phenomenal Good reasoning Praiseworthy Good thinking Prestigious work Good work/Good job Proper Grand Purrrfect Great Remarkable Great going Resounding results Honorable Respectable I appreciate your cooperation. Right on target I appreciate your help.

    MAGIX Movie Edit Pro Crack

    ReplyDelete
  3. The Superbly written article, if only all bloggers offered the same content as you, the internet would be a far better place.
    Amazing content you published on your blog post. Thanks for sharing this!

    Thank you for every other informative site.
    Where else may just I get that type of info written in such an ideal way?

    You definitely put a brand new spin on a topic that’s been discussed for many years.
    Wonderful stuff, just wonderful!
    NTLite Crack

    ReplyDelete
  4. Thank you so much for sharing all this wonderful info with the how-to's!!!! It is so appreciated!!! You always have good humor in your posts/blogs. So much fun and easy to read!
    Speedify Crack
    Viber Mac Crack
    Twitterrific for Twitter Crack
    EndNote Mac Crack
    SyncBackPro Crack

    ReplyDelete