Friday, November 13, 2009
59வயது இந்திய பிரஜை பிரித்தானிய தலைனகர் லன்டனில் கின்னஸ் சாதனை! ! !
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மன்ஜித் சிங். இவர் லண்டனில் வசித்து வருகிறார். இவர் தனது தலைமுடியால் இரட்டைத் தட்டு பஸ் ஒன்றைக் கட்டி இழுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மன்ஜித்சிங்குக்கு 59 வயதாகிறது. இவர் நேற்று மத்திய லண்டன் பேட்டர் ஸீ பார்க்கில் கின்னஸ் அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் 7 தொன் எடை கொண்ட வின்டேஜ் இரட்டைத் தட்டு பஸ்ஸைத் தனது தலை முடியில் கட்டி 21.2 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை குறித்து மன்ஜித் கூறுகையில்,
"பஸ்ஸைத் தலைமுடியில் கட்டி இழுக்கும் போது வலித்தாலும், வேதனை சாதனைக்காகத்தான் என்று நினைத்த போது அது மறைந்து விட்டது" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment