Monday, April 12, 2010

பற்களை பாதுகாப்போம்...



தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் வலி தெரியும் என்பதுபோல இறைவன் எமது உடம்பில் தந்த கொடைகலில் ஒன்றுதான் பல்லும்.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி... என பழமொழிக்கு சொல்லுவார்கள். பல் போனால் சொல் போச்சு என்று பேச்சுக்கு சொல்வார்கள்

நம்மில் பலபேருக்கு பல்தான் தகறாறு. பண்டையகால மனிதர்களை பாருங்கள் என்பது வயதிலும் அனைத்துப்பல்லும்  உறுதியாக இருக்கும். மொத்தம் உள்ள 32 பல்களில் ஒரு முறை எண்ணிப்பாருங்கள். 20 லிருந்து 30க்குள் தான் இருக்கும். போனது போகட்டும். இருப்பதையாவது எப்படி பாதுகாப்பது எனப்பார்ப்போம். 
முதலில் பற்களின் உபயோகங்களை பார்ப்போம்.


·         முகத்திற்கு அழகு சேர்கின்றது.
·         அழகான உச்சரிப்பாக பேசுவதற்கு பயன்படுகிறது.
·         சிறந்த புண்ணகை சிரிப்புக்கு பயன்படுகிறது.
·         உண்ணும் உணவை நன்றாக மென்று உண்பதற்கு பயன்படுகிறது.


பல் நோய் வரக் காரணங்கள்



·         பற்களை முறையாக துலக்கி சுத்தமாக வைக்காமல் இருப்பது.
·         ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள்.
·         அதிகமான இனிப்பு உண்பது.
·         சுத்தமில்லாத உணவு வகைகள்.
·         தவறான வேலைகளுக்கு பற்களை பயன்படுத்துவது. (பல்லால் பாட்டில் திறப்பது இறுக்கமான பொருட்களை கடிப்பது)
·         விபத்தால் பல்(முன் பற்கள்) உடைந்து போவது.
·         உடலில் வரும் மற்ற நோய்கள் மற்றும்நிலைகளினால் பல்லில் ஏற்படும் பாதிப்பு.
(சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு
வரும் பல் பிரச்சனைகள்).

பற்களை பாதுகாக்கும் வழிகள்.

·         காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை
         பல்துலக்குதல் வேண்டும்.

·         நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

·         உணவு உட்கொண்டு முடித்தவுடன் வாயை  கொப்பளித்தல் வேண்டும்.

·         ஆரோக்கியமான பச்சை காய்கறிகள் மற்றும்
நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல் வேண்டும்.

·         இனிப்பு - சாக்லேட் மற்றும் பல்லில் ஒட்டும்
உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்தல் வேண்டும்.
 
·         ப்ளுரைட் கலந்த தரமான பற்பசையை 
பயன்படுத்துதல் வேண்டும்.

·         ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை
அணுகி பல்லை பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.


வந்தபின்பு அவஸ்தைபடுவதைவிட வரும்முன்
காப்பது சால சிறந்தது. பல் வலி பெறும் அவஸ்தை. பற்களை பாதுகாத்து ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.
 பதிவு  பிடித்திருந்தால் பின்னூட்டமிடவும்..

2 comments:

  1. அருமையான பதிவு நண்பரே. தொடரட்டும். ஆனால் சொற் பிழைகளை தவிர்த்துக் கொள்ளுதல் நலம். (என்பது வயதிலும் = எண்பது வயதிலும்) (புண்ணகை- புன்னகை) இப்படியாக....

    அன்புடன்
    ஹரீகா

    ReplyDelete
  2. ஹரீகாவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கூடியளவு பிழைகளை குறைத்துக்கொள்ள முயல்கிறேன்.

    ReplyDelete