Thursday, December 3, 2009

வானொலி அறிமுகம் அக்னி FM



இலங்கையின் தமிழ் ஊடகத்துறையில் 2009 ஏப்பிரல் 27ம் திகதி அக்னி FM காலடி எடுத்து வைத்தது. அன்றைய தினம் இல 23 பொக்குன வீதி, தெஹிவளையில் உள்ள அக்னி FM நிலைய கட்டிடத்தில் உத்தியோகபூர்வமாக www.akknifm.com இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மே மாதம் 09ம் திகதி முதல் அக்னி FM ஆனது தனது பரீட்ச்சார்த்த ஒலிபரப்பை ஆரம்பித்தது.

முற்று முழுதாக இளம் அறிவிப்பாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அக்னி FM இன்று உலகலாவியரீதியில் இணையத்தின் ஊடாக பல நேயர்களைக் கொண்டுள்ளமை ஒரு விசேட அம்சமாகும்.

ஆரம்பத்தில் 10 இளம் அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுத்த Reliance Networks சமகால தேவைக்கு ஏற்ப அவர்களுக்கு சகலவிதமான பயிற்சிகளையும் முன்னணி அறிவிப்பாளர்களைக் கொண்டு வழங்கியது. அதன் பின்னர் மே மாதம் 15ம் திகதி முதல் தமது நிகழ்ச்சிகளை நேரடி ஒலிபரப்புச் செய்தது.

இந்நிலையில் ஜூன் மாதம் 07ம் திகதி மேலும் 18 இளம் அறிவிப்பாளர்கள் Reliance Networks நிறுவனத்தால் நடாத்தப்படும் Dip.in.Radio Broadcasting பயிற்சி நெறிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் பலர் தமது சிறந்த படைப்பாற்றல்களை வெளிக்காட்டியதன் காரணமாக தமது பயிற்சிநெறி முடிவடைவதற்கு முன்னரே அக்னி FM இல் பயிற்சி அறிவிப்பாளர்களாக இணைந்து கொண்டனர்.

மேலும் ஜூலை 19ம் திகதி 15 இளம் அறிவிப்பாளர்கள் நாடளாவியரீதியில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சாராதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 05 மாதகாலமாக இணைய வழியில் ஒலித்துக் கொண்டிருக்கும் அக்னி FM கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி முதல் 24 மணிநேர நேரடி ஒலிபரப்பை நடத்துகிறது.

முற்று முழுதாக கணினி மயப்படுத்தப்பட்ட ஊடகமாகத் திகழும் அக்னி FM மாணவர்களுக்கென தனியான ஊடக கற்கை நிறுவனத்தையும் நடத்திவருகிறது. Reliance networks என்கின்ற இந்த ஊடக கற்கை நிறுவனத்தில் Dip.in.Radio Broadcasting கற்கை நெறியை பயிலும் மாணவர்கள் 06 மாத காலத்தின் பின நடாத்தப்படும் அறிமுறை செயன்முறைகளில் பரீட்சையில் அவர்கள் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் diploma சான்றிதழும் பெறுவர். இந்த சான்றிதழ் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த வானொலியை எமது வனொலி கெட்ஜட்டிலும் கேட்கலாம்.
மேலதி விபரங்களுக்கு..
அக்னி FM

No comments:

Post a Comment