Wednesday, July 21, 2010

முற்பதிவு செய்ய வேண்டாம்...



இறைவன் மனிதனை படைத்து அவர்களுக்கு தேவையான இயற்கையை சரி சமமாகவே படைத்துள்ளான். அதிலும் ஒவ்வொரு மனிதனுக்குமுல்ள்ள அறிவு, திறமை, ஆற்றல் மற்றும் இயலுமைகளினால் ஏற்ரத்தாழ்வாக வளங்கள் அமைந்துள்ளது.
சுற்றிவளைத்து வரமால் விடையத்திற்கு நேரடியாக வருகிறேன். இன்றையகாலத்தில் முற்பதிவுமுறையினால் பஸ் வண்டிக்கு, ரயிலுக்கு, திரையரங்குகளுக்கு, விளையாட்டு போட்டி டிக்கட்டுகளுக்கு, உற்பத்தி பொருட்களுக்கு  எல்லாம் முற்பதிவு செய்கின்ற மனிதன் எல்லோருக்கும் பொதுவான விடயங்களுக்கும் முற்பதிவு செய்ய முற்படுகின்றான்.

நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன். துபையில் இருக்கின்ற எனது நண்பரின் அனுபவம். துபாயில் நிருவனக்களால் இலவசமாக கொடுக்கப்படுகின்ற வசிப்பிடங்களில் பத்து அரைகளுக்கு முன்று அல்லது நான்கு குளியலரைகளே உள்ளதாம். அதில் சிலர் குளியலரைகுக்குள் தமது துடைப்பாய் மற்றும் வாளிகளை வைத்து முற்பதுவு செய்துவிட்டு தமது மற்றைய கரியங்கலான பல் துவக்குவது மற்றும் இன்னோரன்ன காரியங்களை செய்துவிட்டு வரும் வரை மற்றையவர்கள் காத்திருக்க வெண்டுமாம். சில முற்கோபக்காரர்கள் கொதித்தெளுவதும் சண்டை சச்சரவுகளும் காலை பொழுதில் ஏற்படுமாம்.
இது என்ன மனித இயல்பு. மற்றவர்களை பற்றி சிந்திக்காமல் சுயநலம் கொண்ட இவர்கள் பொதுவிடயங்களையும் முற்பதிவு செய்யமுற்படுகின்றார்கள். இப்படியானவர்களால் தான் தெருவுக்கு, ஊருக்கு, நகருக்கு, நாட்டுகென்று பல பிரச்சினைகள்.
முற்பதிவு என்பது எதற்கு செய்யவேடுமோ அதற்கு செய்ய வேண்டும் அதைவிடுத்து இறைவனால் இயற்கையாக கொடுக்கபட்டவைக்கும், பொது இடங்களிலும் முற்பதிவு செய்யாமல்
மற்ரையவர்கலின் உணர்வு மற்றும் தேவைகளை மதித்து செயற்படுவோமாக.



3 comments:

  1. ஆஹா! எங்கெல்லாம் முற்பதிவு செய்றது அன்று ஒரு விவஸ்தையே இல்லையா?

    ReplyDelete
  2. பாயிக் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களின் ஆதரவு என்றும் எங்களுக்கு தேவை..

    ReplyDelete
  3. போட்டோ எங்கே கிடைத்தது?

    ReplyDelete