Thursday, May 27, 2010

புதிய தலைவர்களுடன் இந்திய, இலங்கை, சிம்பாப்வே...




சிம்மாப்வே அணி ஏற்கனவே புதிய அணியாக இருந்தாலும் இலங்கை, இந்திய அணிகளை பொறுத்தவரையில் அனுபவ, அதிரடி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் களமிறங்குவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இலங்கை அணியை பொறுத்தவரையில் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார,மஹெல ஜயவர்த்தன,சனத் ஜயசூரிய ,முத்தையா முரளிதரன், மற்றும் லசித் மலிங்க ஆகியோருக்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. சகல துறை துடுப்பாட்ட வீரர் ஏஞ்சலோ மேத்திவ்ஸ் உபதளிவராக செயற்படுவார்.

சகல துறை துடுப்பாட்ட வீரர் ஜீவன் மெண்டிஸ்க்கு முதன் முறையாக சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பங்காள தேசத்திற்கு எதிரான போட்டியில் விளையாடிய இடது கை துடுப்பாட்ட வீரர் லகிறு திரிமன்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 

                   ஜீவன் மெண்டிஸ்             லகிறு திரிமன்



இந்திய அணியை பொறுத்தவரையில் டெண்டுல்கார், தோணி, யுவ்ராஜ சிங் ,காம்பிர், செவர்க், சாகிர் கான், அசீஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங் மற்றும் பிரவீன் குமார் ஆகியோருக்கு ஒய்வு கொடுக்கப்பட்டுள்ளது. விராட் கோலி உபதளலைவராக செயற்படுவார்.
புதிய வீரர்களான பங்கஜ் சிங், அசோக் திண்டா மற்றும் மத்திய பிறேதேச வீரர் நாமன் ஓஜா ஆகியோரும் இனைக்கப்பட்டுள்ளனர்.
                பங்கஜ் சிங்             அசோக் திண்டா             நாமன் ஓஜா

இளம் வீரர்களை கொண்ட எந்த அணி கிண்ணத்தை வெல்வர்? பொறுத்திருந்து பார்போம்...



No comments:

Post a Comment