Wednesday, May 19, 2010

ஆகாயத்திலிருந்து அபுதாபி ...

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அபுதாபியின் ஆகாயத்திலிருந்து எடுக்கப்பட்ட வித்தியாசாமான புகைப்படங்கள்..
  
அபிதபியை பற்றி கொஞ்சம் விரிவாக பார்போமா?

அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகவும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. இந்நாட்டின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியதான அபுதாபி அமீரகத்திலுள்ள இந் நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். இது பாரசீக வளைகுடாவின் மத்திய மேற்குக் கரையில் இருந்து வளைகுடாவுக்குள் துருத்திக்கொண்டிருக்கும் "T" வடிவமான தீவொன்றில் அமைந்துள்ளது. 67,340 கிமீ2 (26,000 ச.மை)பரப்பளவு கொண்ட அபுதாபி நகரத்தில் 860,000 (2007)மக்கள் வாழ்கிறார்கள்.
இந்த நகரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவண் அரசும், அதன் பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ளன.அபுதாபி அமீரக அரச குடும்பத்தின் இருப்பிடமும் இதுவே. அபுதாபி இன்று பல்நாட்டின மக்களைக் கொண்ட பெரு நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. விரைவான வளர்ச்சியும், நகரமயமாக்கமும், இங்கு வாழும் மக்களின் ஒப்பீட்டளவில் அதிகமான சராசரி வருமானமும் சேர்ந்து இந் நகரத்தை முற்றாகவே மாற்றியுள்ளன.
நாட்டின் தலைநகரம் என்ற வகையில் இது ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல், கைத்தொழில் நடவடிக்கைகளினதும், பண்பாடு மற்றும் வணிக நடவடிக்கைகளினதும் மையமாக விளங்குகிறது. அபுதாபி நகரம் மட்டும் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15% ஐ உருவாக்குகின்றது. நாட்டின் முக்கியமான நிதி அமைபான மத்திய வங்கியும், வணிக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களும் இங்கு அமைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய உற்பத்தியாளர்களில் ஒன்றான அபுதாபி அண்மைக்காலங்களில் அதன் பொருளாதார அடித்தளத்தை, பல்வேறு நிதிச் சேவைகளிலும், சுற்றுலாத்துறையிலும் முதலீடு செய்வதன் மூலம் விரிவாக்கியுள்ளது.
இப் பகுதியின் மூன்றாவது செலவு கூடிய நகரமான அபுதாபி, உலகின் செலவு கூடிய நகரங்களின் வரிசையில் 26 ஆவது இடத்தில் உள்ளது.




2 comments:

  1. படங்கள் அருமை, பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. நிகழ்காலத்தில்
    உங்கள் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete