![]()  |                    |
| தீவைக்கப்பட்ட திரை அரங்கம் | 
இலங்கையின் மட்டக்களப்பில்  தென்னிந்திய தமிழ் திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  ''ராவணம்'' திரைப்படம் திரையிடப்படவிருந்த                      அரங்கத்துக்கு தீ வைக்கப்பட்டது.
இலங்கையில் வடக்கு கிழக்கு  மாகாணங்களிலுள்ள சினிமா தியேட்டர்களின் உரிமையாளர்களுக்கு "சுதந்திர  இலங்கையின் தமிழர்கள் " எனக் குறிப்பிட்டு                   அனுப்பி வைக்கப்பட்டுள்ள அநாமதேய துண்டுப்  பிரசுரமொன்றில் 18ஆம் திகதி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை  தென்னிந்திய தமிழ் சினிமா                   எதிர்ப்பு வாரம் அனுட்டிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.                
இப்படியான துண்டுப் பிரசுரம்  வெளியாகியுள்ள நிலையில் "ராவணன்'' தமிழ் திரைப்படம் திரையிடப்படவிருந்த  மட்டக்களப்பு "சாந்தி" திரையரங்கின்                   திரை இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தீ  வைக்கப்பட்டது.                
                   இந்த சம்பவமானது சினிமா தியேட்டர்  உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், தாக்கத்தையும்  எற்படுத்தியுள்ளதாக சினிமா துறையுடன்                   தொடர்புடையவர்கள் தெரிவிக்கின்றார்கள்.                
                            ![]()  |                       |
| தீக்கிரையான திரை | 


eksaar may be happy
ReplyDelete