Saturday, May 22, 2010
செல்போன்களை அதிகம் உபயோகிப்பதால் மூளைப் புற்று நோய் ஏற்படும் அபாயம் ...
செல்போன்களை அதிகம் உபயோகிப்பதால் மூளைப் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் லண்டனில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு சராசரியாக 30 நிமிடங்கள் செல்போன் பயன்படுத்துவதே அதிகப்படியான உபயோகம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 13 நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளில் 5 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இளைஞர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு 1 மணி நேரம் அவர்கள் செல்போனில் பேசுவதாகத் தெரியவந்துள்ளது. எனினும் இந்த ஆய்வில் 30 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள் யாரும் ஆய்வுக்கு உள்படுத்தப்படவில்லை.
செல்போன்களை இடது செவியில் தான் பெரும்பாலானோர் காதில் வைத்துப் பேசுகின்றனர். இதனால் காதில் பாதிப்பு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் செல்போனை வைத்துப் பேசும் பக்கத்தில் மூளையில் கட்டி ஏற்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மிகவும் குறைவு தான் எனவும் உண்மையான பாதிப்புகள் இன்னும் மிக அதிகம் எனவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து செல்போன்களை தயாரிக்கும் நிறுவனங்களே "செல்போன்களை அளவோடு பயன்படுத்த வேண்டும்' என எச்சரிக்கை வாசகங்களை செல்போன்களை பேக்கிங் செய்யும் அட்டைப்பெட்டிகளில் அச்சடித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
இன்று செல்போன் அத்தியாவசிய ஒன்றாகி போனது. அதன் பயன்பாட்டை குறைப்பது சாத்தியம் இல்லை.அறிவியல் அதற்கும் விடைத் தேடும் என்று நம்புகிறோம். நல்ல விசயம் சொல்லியதற்கு நன்றி. வாழ்த்துக்கள்
ReplyDeletewww.thalaivan.com
ReplyDeleteவணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
உங்கள் வருகைக்கு நன்றி மதுரை சரவணன்
ReplyDeleteநிச்சயம் அறிவியல் இதற்கும் விடை தரும்..