Monday, May 31, 2010

உலகின் உயரமான திருமண தம்பதிகள்.



உலகின் உயரமான கிண்ணஸ் புத்தகத்தில் பதிவான தம்பதிகள். இங்கிலாந்தை சேர்த்த தம்பதிகளான இவர்கள் மணமகள் கிஸா போல்டன் 6 அடி 5 அங்குலம் மணமகன் வில்கோக்ஸ் 7 அடி உயரம்.

Thursday, May 27, 2010

உலகின் அழகிய மர வீடுகள்..

இன்று சனத்தொகை மிக வேகமாக வளர்ச்சியடைய வசிப்பதற்குரிய வீடும் அத்தியாவசியமாகிறது. அந்த வீட்டை கட்டுவதற்கான நிலம் அருமையானதாகவும் வரையருக்கப்பட்தகவும் இருப்பதநால் மாற்றுவழியாக நாம் ஏன் இதை செய்யக்கூடாது? 
சும்மா பேச்சுக்குத்தான்..

உலகின்  அழகிய மரவீடுகள் ..





இரவில் ஆந்தை கத்தும்  தூக்கதுக்கு ஆப்பு ..
அதிகாலையில் குயில் பாட்டு தூக்கத்தை கலைக்கும் ..
திடிரென  பச்சை பாம்புகள்..
பூச்சி புழுக்கள்..
வேண்டாமப்ப  மர வீடு .

புதிய தலைவர்களுடன் இந்திய, இலங்கை, சிம்பாப்வே...




சிம்மாப்வே அணி ஏற்கனவே புதிய அணியாக இருந்தாலும் இலங்கை, இந்திய அணிகளை பொறுத்தவரையில் அனுபவ, அதிரடி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் களமிறங்குவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இலங்கை அணியை பொறுத்தவரையில் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார,மஹெல ஜயவர்த்தன,சனத் ஜயசூரிய ,முத்தையா முரளிதரன், மற்றும் லசித் மலிங்க ஆகியோருக்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. சகல துறை துடுப்பாட்ட வீரர் ஏஞ்சலோ மேத்திவ்ஸ் உபதளிவராக செயற்படுவார்.

சகல துறை துடுப்பாட்ட வீரர் ஜீவன் மெண்டிஸ்க்கு முதன் முறையாக சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பங்காள தேசத்திற்கு எதிரான போட்டியில் விளையாடிய இடது கை துடுப்பாட்ட வீரர் லகிறு திரிமன்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 

                   ஜீவன் மெண்டிஸ்             லகிறு திரிமன்



இந்திய அணியை பொறுத்தவரையில் டெண்டுல்கார், தோணி, யுவ்ராஜ சிங் ,காம்பிர், செவர்க், சாகிர் கான், அசீஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங் மற்றும் பிரவீன் குமார் ஆகியோருக்கு ஒய்வு கொடுக்கப்பட்டுள்ளது. விராட் கோலி உபதளலைவராக செயற்படுவார்.
புதிய வீரர்களான பங்கஜ் சிங், அசோக் திண்டா மற்றும் மத்திய பிறேதேச வீரர் நாமன் ஓஜா ஆகியோரும் இனைக்கப்பட்டுள்ளனர்.
                பங்கஜ் சிங்             அசோக் திண்டா             நாமன் ஓஜா

இளம் வீரர்களை கொண்ட எந்த அணி கிண்ணத்தை வெல்வர்? பொறுத்திருந்து பார்போம்...



Saturday, May 22, 2010

செல்போன்களை அதிகம் உபயோகிப்பதால் மூளைப் புற்று நோய் ஏற்படும் அபாயம் ...


செல்போன்களை அதிகம் உபயோகிப்பதால் மூளைப் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் லண்டனில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​

ஒரு நாளைக்கு சராசரியாக 30 நிமிடங்கள் செல்போன் பயன்படுத்துவதே அதிகப்படியான உபயோகம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.​ 13 நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளில் 5 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.​ மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.​ ​

இளைஞர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.​ சராசரியாக ஒரு நாளைக்கு 1 மணி நேரம் அவர்கள் செல்போனில் பேசுவதாகத் தெரியவந்துள்ளது.​ எனினும் இந்த ஆய்வில் 30 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள் யாரும் ஆய்வுக்கு உள்படுத்தப்படவில்லை.

செல்போன்களை இடது செவியில் தான் பெரும்பாலானோர் காதில் வைத்துப் பேசுகின்றனர்.​ இதனால் காதில் பாதிப்பு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.​ மேலும் செல்போனை வைத்துப் பேசும் பக்கத்தில் மூளையில் கட்டி ஏற்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.​ ​

ஆய்வில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மிகவும் குறைவு தான் எனவும் உண்மையான பாதிப்புகள் இன்னும் மிக அதிகம் எனவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.​ ​ செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து செல்போன்களை தயாரிக்கும் நிறுவனங்களே "செல்போன்களை அளவோடு பயன்படுத்த வேண்டும்' என எச்சரிக்கை வாசகங்களை செல்போன்களை பேக்கிங் செய்யும் அட்டைப்பெட்டிகளில் அச்சடித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.​ ​

Wednesday, May 19, 2010

ஆகாயத்திலிருந்து அபுதாபி ...

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அபுதாபியின் ஆகாயத்திலிருந்து எடுக்கப்பட்ட வித்தியாசாமான புகைப்படங்கள்..
  
அபிதபியை பற்றி கொஞ்சம் விரிவாக பார்போமா?

அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகவும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. இந்நாட்டின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியதான அபுதாபி அமீரகத்திலுள்ள இந் நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். இது பாரசீக வளைகுடாவின் மத்திய மேற்குக் கரையில் இருந்து வளைகுடாவுக்குள் துருத்திக்கொண்டிருக்கும் "T" வடிவமான தீவொன்றில் அமைந்துள்ளது. 67,340 கிமீ2 (26,000 ச.மை)பரப்பளவு கொண்ட அபுதாபி நகரத்தில் 860,000 (2007)மக்கள் வாழ்கிறார்கள்.
இந்த நகரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவண் அரசும், அதன் பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ளன.அபுதாபி அமீரக அரச குடும்பத்தின் இருப்பிடமும் இதுவே. அபுதாபி இன்று பல்நாட்டின மக்களைக் கொண்ட பெரு நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. விரைவான வளர்ச்சியும், நகரமயமாக்கமும், இங்கு வாழும் மக்களின் ஒப்பீட்டளவில் அதிகமான சராசரி வருமானமும் சேர்ந்து இந் நகரத்தை முற்றாகவே மாற்றியுள்ளன.
நாட்டின் தலைநகரம் என்ற வகையில் இது ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல், கைத்தொழில் நடவடிக்கைகளினதும், பண்பாடு மற்றும் வணிக நடவடிக்கைகளினதும் மையமாக விளங்குகிறது. அபுதாபி நகரம் மட்டும் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15% ஐ உருவாக்குகின்றது. நாட்டின் முக்கியமான நிதி அமைபான மத்திய வங்கியும், வணிக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களும் இங்கு அமைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய உற்பத்தியாளர்களில் ஒன்றான அபுதாபி அண்மைக்காலங்களில் அதன் பொருளாதார அடித்தளத்தை, பல்வேறு நிதிச் சேவைகளிலும், சுற்றுலாத்துறையிலும் முதலீடு செய்வதன் மூலம் விரிவாக்கியுள்ளது.
இப் பகுதியின் மூன்றாவது செலவு கூடிய நகரமான அபுதாபி, உலகின் செலவு கூடிய நகரங்களின் வரிசையில் 26 ஆவது இடத்தில் உள்ளது.