Tuesday, April 27, 2010

உலகின் மிகப் பெரிய டெலஸ்கோப் சிலியில்! ..


அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய டெலஸ்கோப் அமைக்கப்பட உள்ளது. இது ரூ.5 ஆயிரம் கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.


இந்த தகவலை தெற்கு ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வானத்தில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு அப்பால் நடைபெறும் அதிசயங்களை உன்னிப்பாகக் கவனிக்க முடியும்.

உலகின் மிகப் பெரிய டெலஸ்கோப் ஆய்வு மையம்.

இது கடல் மட்டத்தில் இருந்து 3,060 மீட்டர் உயரத்தில் மலை மீது அமைக்கப்படுகிறது. சிலியின் வட பகுதியில் மைன் ரிச்அடகாமா பாலைவனப் பகுதியில் இந்த மலை உள்ளது.

மற்ற டெலஸ்கோப்களை விட இதில் மிகவும் தெளிவாகப் பார்க்க முடியும். இந்த டெலஸ்கோப் அமைக்கும் பணி 2018ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, April 25, 2010

உலக கிண்ண களியாட்டத்தில் தென்னாபிரிக்கா.

 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாட்களே இருக்கின்ற நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கோலாகலங்கள் தொடங்கியுள்ளன.
ஜூன் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 11 ஆம் தேதி வரை 2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இடம் பெறவுள்ளன.
32 நாடுகள், 9 நகரங்களிலுள்ள 10 விளையாட்டு அரங்கங்களில் இடம் பெறவுள்ள இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கின்றன.
உலகெங்கும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் நேரிலும் தொலைக்காட்சியிலும் இந்தப் போட்டிகளை கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி-ஓர் அறிமுகம்
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா என்று வர்ணிக்கப்படும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் ஒரு ஆப்பிரிக்க நாட்டில் முதல் முறையாக நடைபெறவுள்ளன.
ஆப்பிரிக்காவின் ஒரு அணி உலகக் கோப்பையை வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு அந்தக் கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் இருக்கிறது.
இந்த விடயத்தில்,மொழி, மதம், இனம், கலாச்சாரம், அரசியல், போட்டி பொறாமை என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு ஒற்றுமை இருக்கின்றது. 

நன்மைகளை அளிக்கவுள்ள போட்டிகள்


ஃபுட்பால் ஃபார் ஹோப் அதாவது ஒளிமையமான எதிர்காலத்துக்காக கால்பந்து என்கிற லட்சியத்துடன் சர்வதேச கால்பந்து சம்மேளனம் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை முன்னெடுத்துச் செல்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடிவுக்கு வந்த பிறகும் அது ஏற்படுத்தப்போகும் நன்மைகள் தொடரும் என சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவர் செப் பிளெட்டர் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் கல்வி, அதுவும் கால்பந்தின் மூலம் அதை விளையடும் இளம் வீரர்கள் மூலம், அவர்களின் ஆரோக்கியத்தின் மூலம் நன்மை ஏற்படப் போகிறது. ஆரோக்கியம், கல்வி, கால்பந்து ஆகிய நன்மைகள் 2010 தொடங்கி 2015 ஆம் ஆண்டு வரை தொடரும்
செப் பிளாட்டரின் இந்த அறிவிப்பு உலகமெங்கும் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த முன்னெடுப்பில் ஃபிஃபாவுக்கு உதவ உலகின் பல நாடுகள் முன்வந்துள்ளன.
கால்பந்தின் மூலம் எதிர்காலம் என்கிற லட்சியம் ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அனைவருக்கும் உதவும் என்றும் ஃபிஃபாவின் தலைவர் கூறியுள்ளார்.
இந்தத் திட்டங்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு மட்டும் உதவி செய்யும் என்றில்லை, ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் பலன் பெறும். ஆப்பிரிக்க கண்டத்தில் இந்த முன்னெடுப்பு நடைபெற்ற பிறகு உலகம் முழுவதும் இந்தத் திட்டம் எடுத்துச் செல்லப்படும்.
புதிய விளையாட்டு அரங்கங்கள்



ஜூன் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை கால்ப்ந்து போட்டியில் 32 நாடுகள் பங்கு பெறுகின்றன. அவை எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
போட்டிகள் 10 மைதானங்களில் நடைபெறும். இவை 9 நகரங்களில் அமைந்துள்ளன. கேப்டவுன், டர்பன், ஜோஹனஸ்பர்க், ப்ளூம்ஃபொண்டைன், போர்ட் எலிசபெத், நெல்ஸ்ப்ரூயிட், பொலக்வானே, ரஸ்டன்பர்க் மற்றும் பிரெட்டோரியா ஆகிய நகரங்களில் போட்டிகள் இடம் பெறவுள்ளன.
போட்டிகளுக்காக பல புதிய விளையாட்டரங்கங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சாக்கர் சிட்டி இந்த அரங்கில் தான் 2010 உலகக் கோப்பை போட்டியின் முதல் மற்றும் இறுதி ஆட்டங்கள் இடம் பெறவுள்ளன.
கலாபாஷ் எனும் மிகவும் புகழ் பெற்ற ஆப்பிரிக்க பானையின் வடிவத்தை மையப்படுத்தி இந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரங்கில் 95,000 பேர் அமர்ந்து போட்டிகளைக் காண முடியும்

போட்டி கால அட்டவணை.



இன்னும் எஞ்சியிருக்கும் நாட்கள்

Wednesday, April 21, 2010

இலங்கையின் 14ஆவது பிரதமராக தி.மு ஜயரட்ன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவருமான டி.எம்.ஜயரட்ன, இலங்கையின் 14ஆவது பிரதமராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

பிரதமர் பதவி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, பசில் ராஜபக்ஷ ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்த போதிலும், இன்று சுபநேரத்தில் திமு என அழைக்கப்படும் டி.எம். ஜயரட்ன பிரதமராகப் பதவியேற்றிருக்கின்றார்.

அலரி மாளிகையில் முன்னாள் பிரதமர், புதிதாக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரசியல் பிரமுகர்கள் இதன்போது வருகை தந்திருந்தனர்.

திசாநாயக்க முதியான்சலாகே ஜயரட்ன, 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி பிறந்தார். கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜயரட்ன 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றார்.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் நடந்த ஆறாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, கால்நடை அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்து வந்தவராவார்.


கண்டி மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்.


கண்டி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 339819 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 192798 வாக்குகளையும் ஜனநாயக தேசிய முன்னணி 23728 வாக்குகளையும் பெற்றுள்ளன.

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 8 ஆசனங்களும் ஐ.தே.கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றி பெற்றோர் விபரம் 



ஐக்கிய தேசிய கட்சியில்  வெற்றி பெற்றோர் விபரம்

கண்டி மாவட்டத்தில் 85 ஆயிரம் தமிழ் வாக்குகள் உள்ள போதும் ஆளுங்கட்சியிலும் ஐக்கிய தேசிய கட்சியிலும் போட்டியிட்ட எந்தவொரு தமிழ் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. ஆனால் கண்டிமாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் வாக்குகளைக்கொண்ட முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நான்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் இந்தக்கட்சியில் போட்டியிட்ட இராஜரட்ணமும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட மதியுகராஜாவும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் பைசர் முஸதபா 20 ஆயிரம் முஸ்லிம் அல்லாதவர்களின் வாக்குகளாலும் நாவலப்பிட்டிய மீள்வாக்களிப்பில் முஸ்லிம் மக்கள் வழங்கிய பெரும் ஆதரவாலும் வெற்றி பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


மேலும் தேசிய பட்டியலில் தெரிவானோர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 17 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ரட்ணசிறி விக்கிரமநாயக்க, டி.எம்.ஜெயரத்ன, டளஸ் அழகபெரும, ஜீ.எல்.பீரிஸ், டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண,கீதாஞ்சன குணவர்த்தன, வண.எல்லாவள மேதானந்ததேரர், முத்து சிவலிங்கம், அச்சல ஜாகொட, விநாயகமூர்த்தி முரளீதரன்,ஜே.ஆர்.பி.சூரியபெரும, ஜனக பண்டார, பேராசிரியர்.ராஜிவ் விஜயசிங்க, ஏ.எச்.எம்.அஸ்வர், மாலினி பொன்சேகா, கமல் ரணதுங்க ஆகியோர் ஐ.ம.சு.மு. தேசிய பட்டியல் உறுப்பினர்களாவர்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.ஐ.தே.க. சார்பில் 9 பேர் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ஹர்ஷ டி சில்வா, ஏர்ன் விக்கிரமரத்ன, டி.எம்.சுவாமிநாதன், ஆர்.யோகராஜன், அனோமா கமகே, ஹசன் அலி, சலீம் மொஹமட் ஆகியோர் ஐ.தே.க தேசிய பட்டியல் உறுப்பினர்களாவர்.

அத்துடன் ஜனநாயக தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக அநுர குமார திஸாநாயக்க , டிரான் அலஸ் ஆகியோரும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினராக எம்.சுமந்திரனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Tuesday, April 20, 2010

யாழ்பாணம் போகலாமா?


எனது நண்பர்களின் யாழ் சுற்றுலாவில் கிளிக்கான அழகிய புகைப்படங்கள்...

Friday, April 16, 2010

நித்திய ஜீவன்.



காதோரம்
வளர்ந்து விழும்
நரைத்த முடிகள்...

மடிப்புகளை
அடிக்கிக்கொண்ட
நெற்றிச் சுருக்கங்கள்...

துரத்துப் பார்வையில்
இருட்டிப் போன
பூ விழுந்த கண்கள்...

பொக்கைவாய் சிரிப்பில்
குழி விழுந்து போன
கன்னங்கள்...

கேட்டும்
திரும்பிப் பார்த்திடாத
பயனற்ற செவிகள்...

போர்த்திய தோலில்
எட்டிப்பார்க்கும்
வலுவிழந்த எலும்புகள்...

சோர்வுச் சிறைதனில்
குடி கொண்டிருக்கும்
மெலிந்த தேகம்...

இன்னும்
தளர்ந்த இருகால் நடையில்
சேர்ந்து கொண்டது மூன்றாவது காலும்

ஆனாலும் அதே
நினைவில் இன்னும்
ஓடிக்கொடிருக்கும்௦-
   மாற்றமில்லாத
நித்திய ஜீவனே
   உன் நினைவுகள்...
.

Thursday, April 15, 2010

கிரிக்கட் ஜோக்...

இலங்கையில் ஒருநாள் சர்வதேச விளையாட்டின் போது,

வர்ணனையாளர்:
இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதாலவது ஒருநாள் போட்டி அழகான ரன்கிரி தம்புள்ள விளையாட்டரங்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது,

இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுகிறது,

இப்போது இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக உபுல் தரங்க மற்றும் கவ்ரவ விளையாட்டு அமைச்சர் சனத் ஜெயசூரிய ஆகியோர் கலத்தினுள் நுழைகின்றனர்,

கவ்ரவ விளையாட்டு அமைச்சர் சனத் ஜெயசூரிய தனது கார்ட்ஐ பெற்றுக்கொண்டு வளமைப்போல தனது பாட், பால் கார்ட் மற்றும் ஹெல்மட்டை சரி பார்த்து, அசிஸ் நேஹ்ராவின் பந்திற்கு தயாராகிறார்,

இதோ ஹசிஸ் நேஹரவின் முதல் பந்து வீசப்படுகிறது, கவ்ரவ விளையாட்டு அமைச்சர் சனத் ஜெயசூரிய துடுப்பெடுத்தாடுகிறார் பந்து பாட்டிற்கும் பாடிற்கும் இடையே சென்று லேக் ஸ்டாம்பை பதம்பார்கிறது.

துடுப்பாட்டவீரர் ஆட்டமிலப்பை மறுத்து சொல்கிறார் .. எனக்கு அதிகூடிய பவர் இருக்கிறது எனவே நடுவர்களுக்கு ஆட்டமிலப்பு வழங்க முடியாது !!"

திடிரென்று நேரடி வர்ணனை தடைபடுகிறது......

ஒரு வெள்ளை வான் மைதானத்தைவிட்டு தூசியுடன் கிளம்புகிறது !!!

நடுவர்களான பில்லி டாக்ரோவும் குமார தருமசெனவும் மைதானத்தின் நடுவில்..

ஆட்டமஇழப்பு மூன்றாவது நடுவருக்கு வழங்கப்படுகிறது, நடுவரின் சிஸ்டம் தடைபடுகிறது

இந்திய அணி தலைவர் டோனி நடுவரிடம் போய் தாமதத்திற்கான காரணத்தை வினவுகிறார்

அதனிடையே இந்திய அணியின் ஆடை மாற்றும் அறையினுள் ஆயுதம் தாங்கிய நபர்கள் நுழைகின்றனர்

சிஸ்டம் சரியாக இந்திய அணி விளையாட தயாராகிறது.

திடீரென பெரியத்திரையில் "ஆட்டமிழக்கவில்லை" "NOT OUT". என வருகிறது

கவ்ரவ விளையாட்டு அமைச்சர் சனத் ஜெயசூரிய நுறு ஓட்டங்களை பெற்றுகொல்கிறார்

பி.கு. அசிஸ் நெஹ்ராவிற்கு சர்வதேச கிரிக்கட்டில் விளையாட தடைவிதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்,

.

Wednesday, April 14, 2010

உலகின் இரண்டாவது உயரமான கட்டிடம் சவுதியில்...



உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக காணப்படுவது துபாயில் உள்ள பர்ஜ் கலிபாவக்கும். 
தற்போது உலகின் இரண்டாவது உயரமான கட்டிடம் கட்டப்பட்டுகொண்டிருக்கிறது சவூதி அரேபியாவில்.
மக்கா ராயல் க்லோக் டவர் என்றழைக்கப்படும் இக்கட்டிடம் உலகின் உயரமான கட்டிமான பர்ஜ் கலிபாவை விட 11 மீட்டர்கள் கட்டையனாதாகும். 
817 மீட்டர் உயரமான மக்கா ராயல் க்லோக் டவர் தற்போதைய உலகின் இரண்டாவது உயரமான கட்டிடமான தய்லண்டில் உள்ள தாய்பி 101 விட 309 மீடர் உயரமானதாகும்.

தாய்பி 101


மக்கா ராயல் க்லோக் டவர்

.
.

Monday, April 12, 2010

நாங்களும் ஏறுவோம்ல...

ஹும்...
படத்தை பாருங்கள் மனிதனால் மட்டுமா ஏறமுடியும் ? \
இந்த இயந்திரத்தை பாருங்கள் எவ்வளவு சாதுரியம்மாக மேலே ஏற்றி பணிபுரிகிறார் இந்தா சாரதி .

 வருடத்தின் சிறந்த இயக்குனர்,
அற்புதம்.

பற்களை பாதுகாப்போம்...



தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் வலி தெரியும் என்பதுபோல இறைவன் எமது உடம்பில் தந்த கொடைகலில் ஒன்றுதான் பல்லும்.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி... என பழமொழிக்கு சொல்லுவார்கள். பல் போனால் சொல் போச்சு என்று பேச்சுக்கு சொல்வார்கள்

நம்மில் பலபேருக்கு பல்தான் தகறாறு. பண்டையகால மனிதர்களை பாருங்கள் என்பது வயதிலும் அனைத்துப்பல்லும்  உறுதியாக இருக்கும். மொத்தம் உள்ள 32 பல்களில் ஒரு முறை எண்ணிப்பாருங்கள். 20 லிருந்து 30க்குள் தான் இருக்கும். போனது போகட்டும். இருப்பதையாவது எப்படி பாதுகாப்பது எனப்பார்ப்போம். 
முதலில் பற்களின் உபயோகங்களை பார்ப்போம்.


·         முகத்திற்கு அழகு சேர்கின்றது.
·         அழகான உச்சரிப்பாக பேசுவதற்கு பயன்படுகிறது.
·         சிறந்த புண்ணகை சிரிப்புக்கு பயன்படுகிறது.
·         உண்ணும் உணவை நன்றாக மென்று உண்பதற்கு பயன்படுகிறது.


பல் நோய் வரக் காரணங்கள்



·         பற்களை முறையாக துலக்கி சுத்தமாக வைக்காமல் இருப்பது.
·         ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள்.
·         அதிகமான இனிப்பு உண்பது.
·         சுத்தமில்லாத உணவு வகைகள்.
·         தவறான வேலைகளுக்கு பற்களை பயன்படுத்துவது. (பல்லால் பாட்டில் திறப்பது இறுக்கமான பொருட்களை கடிப்பது)
·         விபத்தால் பல்(முன் பற்கள்) உடைந்து போவது.
·         உடலில் வரும் மற்ற நோய்கள் மற்றும்நிலைகளினால் பல்லில் ஏற்படும் பாதிப்பு.
(சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு
வரும் பல் பிரச்சனைகள்).

பற்களை பாதுகாக்கும் வழிகள்.

·         காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை
         பல்துலக்குதல் வேண்டும்.

·         நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

·         உணவு உட்கொண்டு முடித்தவுடன் வாயை  கொப்பளித்தல் வேண்டும்.

·         ஆரோக்கியமான பச்சை காய்கறிகள் மற்றும்
நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல் வேண்டும்.

·         இனிப்பு - சாக்லேட் மற்றும் பல்லில் ஒட்டும்
உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்தல் வேண்டும்.
 
·         ப்ளுரைட் கலந்த தரமான பற்பசையை 
பயன்படுத்துதல் வேண்டும்.

·         ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை
அணுகி பல்லை பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.


வந்தபின்பு அவஸ்தைபடுவதைவிட வரும்முன்
காப்பது சால சிறந்தது. பல் வலி பெறும் அவஸ்தை. பற்களை பாதுகாத்து ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.
 பதிவு  பிடித்திருந்தால் பின்னூட்டமிடவும்..