Monday, April 12, 2010

பற்களை பாதுகாப்போம்...



தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் வலி தெரியும் என்பதுபோல இறைவன் எமது உடம்பில் தந்த கொடைகலில் ஒன்றுதான் பல்லும்.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி... என பழமொழிக்கு சொல்லுவார்கள். பல் போனால் சொல் போச்சு என்று பேச்சுக்கு சொல்வார்கள்

நம்மில் பலபேருக்கு பல்தான் தகறாறு. பண்டையகால மனிதர்களை பாருங்கள் என்பது வயதிலும் அனைத்துப்பல்லும்  உறுதியாக இருக்கும். மொத்தம் உள்ள 32 பல்களில் ஒரு முறை எண்ணிப்பாருங்கள். 20 லிருந்து 30க்குள் தான் இருக்கும். போனது போகட்டும். இருப்பதையாவது எப்படி பாதுகாப்பது எனப்பார்ப்போம். 
முதலில் பற்களின் உபயோகங்களை பார்ப்போம்.


·         முகத்திற்கு அழகு சேர்கின்றது.
·         அழகான உச்சரிப்பாக பேசுவதற்கு பயன்படுகிறது.
·         சிறந்த புண்ணகை சிரிப்புக்கு பயன்படுகிறது.
·         உண்ணும் உணவை நன்றாக மென்று உண்பதற்கு பயன்படுகிறது.


பல் நோய் வரக் காரணங்கள்



·         பற்களை முறையாக துலக்கி சுத்தமாக வைக்காமல் இருப்பது.
·         ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள்.
·         அதிகமான இனிப்பு உண்பது.
·         சுத்தமில்லாத உணவு வகைகள்.
·         தவறான வேலைகளுக்கு பற்களை பயன்படுத்துவது. (பல்லால் பாட்டில் திறப்பது இறுக்கமான பொருட்களை கடிப்பது)
·         விபத்தால் பல்(முன் பற்கள்) உடைந்து போவது.
·         உடலில் வரும் மற்ற நோய்கள் மற்றும்நிலைகளினால் பல்லில் ஏற்படும் பாதிப்பு.
(சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு
வரும் பல் பிரச்சனைகள்).

பற்களை பாதுகாக்கும் வழிகள்.

·         காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை
         பல்துலக்குதல் வேண்டும்.

·         நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

·         உணவு உட்கொண்டு முடித்தவுடன் வாயை  கொப்பளித்தல் வேண்டும்.

·         ஆரோக்கியமான பச்சை காய்கறிகள் மற்றும்
நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல் வேண்டும்.

·         இனிப்பு - சாக்லேட் மற்றும் பல்லில் ஒட்டும்
உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்தல் வேண்டும்.
 
·         ப்ளுரைட் கலந்த தரமான பற்பசையை 
பயன்படுத்துதல் வேண்டும்.

·         ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை
அணுகி பல்லை பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.


வந்தபின்பு அவஸ்தைபடுவதைவிட வரும்முன்
காப்பது சால சிறந்தது. பல் வலி பெறும் அவஸ்தை. பற்களை பாதுகாத்து ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.
 பதிவு  பிடித்திருந்தால் பின்னூட்டமிடவும்..

Sunday, April 11, 2010

வானொலி கேட்கலாம் வாங்க...









zakeerwap@gmail.com


































If your browser doesnt work clik below links






Shakthifm Sri Lanka






MajaRadio Sri Lanka






Vasanthamfm Sri Lanka





Vettrifm Sri Lanka






Sri lanka Broadcasting Cooperation Tamil(Thesiya Sevai)





Thendral Sri Lanka






Sooriyanfm Sri Lanka





TamilFlashfm Jaffna Sri Lanka



Monday, April 5, 2010

காலத்தால் அழியாத நினைவுகள் - கிரிக்கெட் .


இலங்கை கிரிக்கெட்  அணியினர்  சாதனை படைப்பதில் வல்லவர்கள் , டெஸ்ட் , ஒருநாள் , இருபதுக்கு20  போட்டிகளில் அதிகூடிய ஓட்ட்கள் 
பெற்ற அணி இலங்கை அணி மாத்திரமே .டெஸ்டில் 1997 ஆம்  ஆண்டு  ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்ற 952 என்ற ஓட்ட  எண்ணிக்கையே  டெஸ்டில் அதிகூடிய ஓட்டக்களாக அசைக்க முடியாத சாதனையாக இன்றும் காணப்படுகின்றது.


இதில் முதல் துடுபெடுத்தாடிய இந்திய அணி முதல் இனிக்சில் 537 ஓட்டங்களை பெற்றது. இதில் நோவ்ஜோத் சிங் சிடு 111 , ராகுல் டிராவிட் 69 , அசாருதீன் 126 , சச்சின் டெண்டுல்கர் 143 ஓட்டக்களை பெற்றனர். கிரிக் இன்போ ஸ்கோர் போர்டு இதோ...



பதிலுக்கு ஆடிய இலங்கை அணியில் மறவன் அதபது முதல் டெஸ்டில் ஆடிய சுழல் பந்து வீச்சாளர் குல்கர்னியின் கன்னி விக்கட்டாக 26 ஓட்டக்களுக்கு ஆட்டமிழக்க ஆடுகளம் நுழைந்த ரோஷன் மகாநாம , ஜெயசூரிய ஜோடி கொடுத்தது இந்திய அணிக்கு தலைவலியை கொடுத்தது. டெஸ்டில் இரண்டாவது விக்கெட்டுக்காக பெற்ற அதிகூடிய ஜோடி சாதனையையும் இவர்கள் பெற்றனர். மகாநாம 225 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க ஜோடி சேர்த்தது ஜெயசூரிய அரவிந்த ஜோடிகள் , ஜெயசூரிய, அரவிந்த , அர்ஜுன ரணதுங்க முறையே 340 ,126 , 86 ஓட்டங்களை பெற்றனர். தந்து கன்னி டெஸ்டில் விளையாடிய மகேள ஜெயவர்தன 66 ஓட்டங்களை பெற்றார். இறுதியாக இலங்கை அணி 952 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இதுவே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி பெற்ற கூடுதலாந ஓட்டமாகும். இதற்கு முன் 1938 இல் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி பெற்ற 907 எண்ணிக்கையே குடுதலான ஓட்டமாக காணப்பட்டது.



இந்த டெஸ்டில் மொத்தமாக நான்கு இனிக்சில் இரண்டு இனிங்க்ஸ் மாத்திரமே ஆடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 



இலங்கை அணியின் ஒருநாள் சர்வதேச அதிகூடிய ஓட்டம் கண்ணோட்டம் அடுத்த பதிவில்... 
.
.