Tuesday, June 29, 2010

ஆசிய வீரர்களின் ஹாட்ரிக் சாதனைகள்..

கிரிக்கட் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை பெறுவது இலகுவானது அல்ல அதுவும் கிரிக்கட் போட்டிகளில் அடிக்கடி காணமுடியாத சாதனை, இதற்கு திறமை, நுணுக்கம், அதிஷ்டம் இருக்க வேண்டும்.


சர்வதேச  கிரிக்கட் வரலாற்றில் இதுவரைக்கும் 65 ஹாட்ரிக் சாதனைகள் பெறப்பட்டுள்ளன , அதில் டெஸ்ட் 37, ஒருநாள் 26. இருபதுக்கு2௦ ல் 2 ஹாற்றிக்கள் பெறப்பட்டுள்ளன.

ஒருநாள் போட்டிகளில் அதிக ஹாற்றிக் சாதனைகள் நிகழ்த்தி இருப்பவர்கள் இங்கிலாந்து வீர்கள், அதற்கு அடுத்தபடியாக அவுசஸ்தேரேலிய வீர்கள். ஆசிய வீரர்கள் வெறும் 8 ஹாட்ரிக்  சாதனைகளையே நிகழ்த்தியுள்ளனர். அதிலும் வாசிம் அகரம் இரண்டு தடவை, முஹம்ர்ட் சமி, அப்துர் ரசாக் உட்பட மூன்று பேரும், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் உட்பட இரண்டு இந்திய வீரர்களும், நுவான் சொய்சா , .அலோக் கபாலி உட்பட இலங்கை, பங்களாதேஷ் வீரர்கள் ஹாட்ரிக் சாதனை பெற்றுள்ளனர்.


டெஸ்ட் போட்டியில் கடைசியாக ஹாட்ரிக் சாதனை  பெற்றவர் இங்கிலாந்து அணியின் ரியன் சைட் போட்டம் இவர் நியூசிலாந்து அணியுடன் 2008 ம் ஆண்டு பெற்றார்.


டெஸ்ட் போட்டி மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்



ஒருநாள் போட்டிகளில் இதுவரை மொத்தமாக 26 ஹாட்ரிக் சாதனைகளில் 15 ஹாட்ரிக்களை ஆசிய வீரர்களே பெற்றுள்ளனர். இதில் 8 ஹெற்றிக்களை பாகிஸ்தானிய வீரர்களும், மொஹம்மத் பர்வேஸ் மகரூப், லசித் மாலிங்க, சமிந்த வாஸ் இரண்டு தடவைகள் உட்பட இலங்கை வீரர்கள் 4 தடவையும், கபில் தேவ் உட்பட இரண்டு இந்தியா , ஒரு பங்களாதேஷ் வீரரும் ஹாட்ரிக் சாதனை பெற்றுள்ளனர்.

ஒருநாள் போட்டியில் முதல் ஓவரில் முதல் மூன்று பந்தில் முதல் மூன்று விக்கட்டுகளையும் பெற்றவர்  இலங்கையின் சமிந்த வாஸ்
பங்களாதேஷுக்கு எதிராக உலக கிண்ண போட்டியில் ,

வீடியோ பார்க்க
ஒருநாள் போட்டியில் நான்கு பந்தில் நான்கு விக்கட்டுகளை கைபர்ரியவர் இலங்கையின் லசித் மாலிங்க. அதை இவர் இறுதியாக நடை பெற்ற உலக கிண்ண போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக பெற்றார்.

வீடியோ பார்க்க
ஒருநாள் போட்டிகளில் அண்மையில் ஹாட்ரிக் பெற்றவர் இலங்கையின் பார்வீஸ் மகரூப் இவர் இந்திய அணிக்கு எதிராக ஆசிய கிண்ண போட்டியில் இதனை பெற்றார்.

வீடியோ பார்க்க
ஒருநாள் போட்டி மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்

இருவதுக்கு20 போட்டிகளில் சர்வதேச மட்டத்தில் 2 ஹாற்றிக்களே பெறப்பட்டுள்ளன. இவைகள் இரண்டும் ஜாகப் ஓரம், ப்ரெட் லீ நிவ்சிலாந்து, அவுச்தேரேலிய வீரர்கள் பெற்றவையாகும்.


இருவதுக்கு20 மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.

ரொம்ப  சிரமப்பட்டு எழுதிய பதிவு. குறை நிறைகளை பின்னூட்டமிடவும்.

Monday, June 28, 2010

டென்னிஸ் வரலாற்றில் புதிய சாதனை 11 மணி நேரம் நடந்த ஆட்டம்

டென்னிசில் இஸ்னர்-மகுத் இடையிலான ஆட்டம் 11 மணி நேரம் நடந்து புதிய சாதனையை கண்டுள்ளது.

வரலாறு படைத்த ஆட்டம்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலக தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஜான் இஸ்னரும், 148-ம் நிலை வீரர் பிரான்சின் நிகோலஸ் மகுத்தும் மோதினார்கள். இருவரும் தலா 2 செட்டை தங்கள் வசப்படுத்திய நிலையில், வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி செட்டில் கடுமையான போராட்டம் காணப்பட்டது. விடாகண்டன்-கொடாகண்டன் போல் இருவரும் சளைக்காமல் மல்லுகட்டினார்கள்.




இதனால் இந்த செட் அனுமன் வால் போல் நீண்டு கொண்டே போனது. கடைசி செட் 59-59 என்று இருந்த போது, அன்றைய தினம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மொத்தம் 10 மணி நேரம் நடந்தும் ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. நூற்றாண்டுக்கு மேலான டென்னிஸ் வரலாற்றில் இவ்வளவு நேரம் எந்த ஆட்டமும் நீடித்ததில்லை. இதற்கு முன்பு அதிகபட்சமாக 2004-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் பேப்ரிஸ் சாண்ட்ரோ-கிளைமென்ட் இடையிலான ஆட்டம் 6 மணி 33 நிமிடங்கள் நடந்ததே அதிக நேர போட்டியாக இருந்தது.

இஸ்னர் வெற்றி

இந்த நிலையில் இஸ்னர்-மகுத் இடையிலான யுத்தம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்தது. அப்போதும் முதல் ஒரு மணி நேரம் இருவரும் தங்களது சர்வீஸ்களில் மட்டும் மாறி மாறி புள்ளிகளை சேர்த்த வண்ணம் இருந்தனர். கடைசியில் இஸ்னர், மகுத்தின் சர்வீசை முறியடித்து, இந்த நீண்ட நேர போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

மொத்தம் 11 மணி 5 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில் 25 வயதான இஸ்னர் 6-4, 3-6, 6-7 (7), 7-6 (3), 70-68 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதில் கடைசி செட் மட்டும் 8 மணி 11 நிமிடங்கள் நீடித்தது. மீண்டும் ஒரு போன்று ஒரு ஆட்டம் நடக்காது என்று இஸ்னர் குறிப்பிட்டார்.

இந்த ஆட்டத்தில் இஸ்னர் 112 ஏஸ் சர்வீஸ்களும், மகுத் 103 ஏஸ் சர்வீஸ்களும் போட்டனர். இதுவும் புதிய சாதனையாக பதிவானது. 2009-ம் ஆண்டு டேவிஸ் கோப்பை உலக குரூப் அரைஇறுதி சுற்றில் குரோஷியாவின் கார்லோவிச் 78 ஏஸ்கள் விளாசியதே இதற்கு முன்பு ஒரு ஆட்டத்தில் ஒரு வீரரின் அதிகபட்ச ஏஸ் சர்வீசாக இருந்தது குறிப்பிடத்தக்கது.




போட்டி  வீடியோ பார்க்க

Friday, June 18, 2010

இலங்கையின் மட்டக்களப்பில் திரையரங்குக்கு தீ வைக்கப்பட்டது

 
 
தீவைக்கப்பட்ட திரை அரங்கம்
தீவைக்கப்பட்ட திரை அரங்கம்
இலங்கையின் மட்டக்களப்பில் தென்னிந்திய தமிழ் திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ''ராவணம்'' திரைப்படம் திரையிடப்படவிருந்த அரங்கத்துக்கு தீ வைக்கப்பட்டது.
இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள சினிமா தியேட்டர்களின் உரிமையாளர்களுக்கு "சுதந்திர இலங்கையின் தமிழர்கள் " எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அநாமதேய துண்டுப் பிரசுரமொன்றில் 18ஆம் திகதி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தென்னிந்திய தமிழ் சினிமா எதிர்ப்பு வாரம் அனுட்டிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான துண்டுப் பிரசுரம் வெளியாகியுள்ள நிலையில் "ராவணன்'' தமிழ் திரைப்படம் திரையிடப்படவிருந்த மட்டக்களப்பு "சாந்தி" திரையரங்கின் திரை இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டது.
இந்த சம்பவமானது சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், தாக்கத்தையும் எற்படுத்தியுள்ளதாக சினிமா துறையுடன் தொடர்புடையவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
தீக்கிரையான திரை
தீக்கிரையான திரை
தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில், "ஐபா" என்ற இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடைபெறவிடாமல் தடுக்க முயற்சித்த இலங்கை அரசாங்கத்தை அவமானப்படுத்த முற்பட்ட தென்னிந்திய தமிழ் சினிமா சமூகத்தினருக்கு எதிரப்பைத் தெரிவிக்கும் வகையிலும், இந்திய சினிமா வியாபாரம் இலங்கையில் தங்கியுள்ளது என்பதை நிருபிக்கவும் இந்த ''தென்னிய தமிழ் சினிமா எதிரப்பு வாரம்'' பிரடகனப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tuesday, June 15, 2010

ஆசிய கிண்ண நேரடி ஒளிபரப்பு ...



போட்டியை தெளிவாக பார்க்க விளம்பரங்களை க்ளோஸ் செய்யவும் ..



Thursday, June 10, 2010

உலகின் மிகவும் வலைந்த சாதனை கட்டிடம் அபுதாபியில்...

கிண்ணஸ் புத்தகத்திர்கமைவாக உலகின் மிகவும் வளைந்த கட்டிடமாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது  ஐக்கிய அரபு ராட்சியத்தின் தலைநகரான அபுதபியிளுள்ள காபிடல் கேட் டவர் (Capital Gate tower ).

இதன் தோற்றம் செஸ் பலகையை போன்றதும், இதன் வளைவு 18 டிகிரியாகும்.

Friday, June 4, 2010

அறிமுகமாகிறது நோக்கியா சைக்கிள் மொபைல் சார்ஜர்.


செல்போனை சார்ஜ் செய்யாமல் வெளியில் சென்றுவிட்டீர்களா? கவலை வேண்டாம். சைக்கிள் இருந்தாலே போதும் செல்போன் சார்ஜ் ஆகிவிடும். ஆம், செல்போன் சைக்கிள் சார்ஜரை நோக்கியா ஒய்ஜ் நிறுவனம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நேற்று அறிமுகம் செய்தது.

விரைவில் இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்சார தட்டுப்பாடு உள்ள இந்த காலத்தில், மின்சார பயன்பாட்டைக் குறைப்பதற்காக இதை தயாரித்துள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது.

‘‘ஐரோப்பிய நாடுகளில் அலுவலகம், ஷாப்பிங் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சைக்கிளில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில்தான் சைக்கிள் வழி செல்போன் சார்ஜரை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

குறிப்பாக ஆம்ஸ்டர்டாமில் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் அதிகம்.எனவேதான் இதை இங்கு அறிமுகம் செய்துள்ளோம். பின்னர் உலகின் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்’’ என நோக்கியா நிறுவன செய்தித் தொடர்பாளர் லியோ மெக்கே தெரிவித்துள்ளார்.

இந்த சார்ஜர், சைக்கிள் சக்கரம் சுற்றும்போது அதிலிருந்து முகப்பு விளக்கு எரிவதைப் போலவே, செல்போனுக்கு தேவையான மின்சாரத்தை கிரகித்துக் கொள்ளும். இதனால் மின்சார பயன்பாடு குறையும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித கேடும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வர உள்ள இதன் விலை ரூ.850 ஆகும்.

IIFA விழாவின் கிரிக்கெட் போட்டி படங்கள்




சர்வதேச இந்தியத்திரைப்பட விருது வழங்கும் விழா கிரிக்கட் போட்டி சற்று முன் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதனாத்தில் நடந்து முடிந்தது.
இறுதியாக நடைபெற்ற போட்டியில் சங்கக்கார அணியிடம் ரித்திக் ரோசன் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. போட்டியை கண்டுகளிக்க ஏராளாமான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருனதனர்.