Monday, October 25, 2010

நான் ஏன் பதிவுலகத்திற்கு வந்தேன்.


தொடர்பதிவுக்கு அழைத்து இரண்டு மாதமும் ஒருவாரம் ஆகின்ற நிலையில் தொடர்பதிவை எழுத என்னத்தை தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு முதற்கண் நன்றிகள். எனது அடுத்த அரை நண்பர் முபாரக் அரும்பவூர் என்னையும் நண்பன் பாயிக்கையும்  தொடர்பதிவுக்கு இரண்டு மாதத்திற்கு முன் அழைத்திருந்தார். பதிவு எழுத ஆர்வமின்மை, வேலை பழு மற்றும் திடீர் தாய் நாட்டுக்கு விஜயம் போன்றவை  தாமதற்கு காரணம் எனலாம். மூன்று மாதமாக பதிவுகள் எழுதாமல் இருந்த என்னை பதிவு உலகத்திற்கு மீண்டும் காலடி வைக்க உதவிய நண்பன் முபாரக்கிற்கு மனமார்ந்த நன்றிகள். தொடர்பதிவெழுத நாம் என்ன பதிவுலக தாதாக்களா??

ஏதோ நான் பதிவுலகத்திற்கு வந்த உண்மைகள் இதோ....

1.அது என்ன உண்மை உணர்வுகள்?

ப்ளாக் ஆரம்பிக்க நிறைய பெயர்களை தேடினேன் கிடைக்கவில்லை. நாம் என்ன பொய்யா எழுதப்போறோம் உண்மையதானே.. அதனால்தான் உண்மை உணர்வுகள்..

பதிவுலகத்திற்கு வர காரணம்?

பாடசாலை காலத்திலிருந்தே இணையத்தில் ஆர்வம் இணைய பக்கங்கலை உருவாக்க வேண்டும் என்ற ஆசை மொபைல்களில் இலவசமாக பக்கங்களை தரக்கூடிய தளங்களில் இணைய உலகிற்கு சாகிர்வெப்(ZAKEERW@P ) மூலம் அறிமுகமாகி சுமார் ஐந்து இலட்சத்துக்கு மேல் ஹிட்களை பெற்று மேலும் பல பிறபல மொபைல் தரவிறக்க பக்கங்கள் கலக்கி வந்தேன். என் அண்ணாவின் நண்பன் மூலம் எச்.டீ.எம்.எல் (HTML) மொழியை கொஞ்சம் அறிந்து Geocities, freewebs, tripod, webs  போன்ற தலங்களில் ஆங்கிலத்தில் பக்கங்களை உருவாக்கி இருகிறேன்.

ஒருநாள் பேஸ்புக்கில் உலவிக்கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவரின் வெற்றி எப்.எம் இணைப்பு முலம்  (அதற்கு முன் இலங்கையில் இப்படி ஒரு வானொலி சேவை இருப்பதே தெரியாது)  அதில் இருந்த எ.ஆர்.வி.லோசன்( எனக்கு விருப்பமான் அறிவிப்பாளர்) மற்றும் ஹிசாம் (எனது பிரத்தியேக வகுப்பு நண்பர்) பதிவுகளை பார்த்து நாமளும் தமிழில் பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் உருவானது. ஆனால் தமிழ் சாரலமாக எழுதவராதது மற்றும் தமிழ் தட்டச்சு சரியாக தெரியாமை எனக்கு தடையாக அமைந்தது.

ஒரு நாள் நன்பர் முபாரக்கின் அறைக்கு சென்ற போது அவர் ” ஹாய் அரும்பாவூர்” எனும் பதிவு எழுத ஆரம்பித்திருப்பது தெரியவந்தது. அப்போதுதான் ஆஹா நாமும் ஆரம்பித்தால் என்ன என்று அவர் மூலம் குகுள் தட்டச்சு முறையை அறிந்து பதிவு இட ஆரம்பித்தேன்.

2.முதல் பதிவை பற்றி ?

ஆரம்பம் என்பதால் எதை எழுதுவது என்று தெரியாமல் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய ஒரு கவிதையை முதல் பதிவாவாக (வாசிக்க ) இட்டேன்.

3.முதல் பாராட்டு

எனது நான்காவது பதிவிலே எனக்கு முதலாவது பின்னுட்டம் இட்டவர் பி.சிவா, எனது ஏழாவது பதிவில் முதல் பாராட்டு இல்லை வாழ்த்தை தெரிவித்தவர் (நிகழ்காலத்தில் ) பெயர் தெரியாதவர்.

4.பின்னுட்டம் வாக்களிப்பு எதற்கு முன்னுரிமை ?

இரண்டுக்கும் சமமான உரிமை தான். மூட் வந்தால் வாக்களிப்பேன். பின்னுட்டம் இடுவது மிக குறைவு. பின்னுட்டம் இடுவதில் உள்ள சோம்பெரித்தனமும நேரமின்மையும்  இதற்கு காரணம். பதிவுலக நண்பர்களே மன்னிக்க வேண்டும். இனியாவது முயற்சிக்கிறேன்.

5.வலைபதிவை பிரபலம் ஆக்க என்ன செய்வீர்கள் ?

தமிலிஷ், தமிழ் 10 , உலவு, நிவ்ஸ் பானை, தமிழ் மனம், பூச்சாரம், யாழ்தேவி போன்றவற்றில் பதிவுகளை இணைப்பேன் மற்றும் பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் பகிர்வேன்.

6.நண்பர்களின் ஆதரவு உள்ளதா ?

ஹும்.. கொஞ்சம் உள்ளது.
இன்னும் தேவை. ( உருப்படியான பதிவு இட்டால தானே ஆதரவு கிடைக்கும்)

7.உங்களுக்கு பிடித்த பதிவர்?

நிறையப்பேர் உள்ளனர் ஒருசிலரை குறிப்பிட்டால் நீங்களெல்லாம் கோபிப்பிர்கள்.

8.வலைபதிவு வந்த பின்பு ஏதும் மாற்றம் ?

அதிகம் எழுத வேண்டுமென்ற ஆசை இருந்தது ,
ஆனால் இப்போது கொஞ்சம் குறைவு !!!

9.பதிவுலகில் வந்த பின்பு நண்பர்களின் வட்டம் அதிகம் ஆகி உள்ளதா ?

இருந்தது, எனது தொடர்புகளை ரகசியமாக வைத்திருந்ததால் மிக குறைவு என நினைக்கிறேன்.
பேஸ்புக்கில் தொடர்புகொள்ள  இங்கே அழுத்தவும்.

10.மற்ற வலைபதிவு நண்பர்களுக்கு ஏதும் கருத்து ?

உண்மையை உண்மையாக எழுதுங்கள்.
உங்களது ஆதரவை எனக்கும் மறக்காமல் தரவும்.
.

.