Sunday, January 31, 2010

இருளில் தேடல்.











வேரை அறுத்து விட்டு
பூக்கும் வரை
காத்திருக்கிறோம்!
பெளர்ண்மிக்காய்
நிலாச் சோறு
சமைக்கிறோம்
அமாவாசையில்...!
எமக்குள்ளே சமாதானத்தை 
தொலைத்து விட்டு
உலகெங்கும்
தேடுகிறோம்.

Friday, January 29, 2010

விசித்திர உண்மை

கதரி அழுகிறோம்

சமதானத்திற்காக...

இலட்சியங்களை...


எதிர்காலத்தை...


சுகங்களை...


சொந்தங்களை...


இழந்து


கண்ணீர் வடிக்கிறோம்...

சமாதனத்தை தேடி!


எமக்குள் இன்னும்


நாங்கள்


எதிரி தான்!


Tuesday, January 19, 2010


கன்னி(யின்) 
கவிதை

தய ஆழத்தில்
ஓரு கவிதை
வரைந்தேன்!
முடிவு தெரியாமல்
தவிக்கிறேன்...!
முடித்து வைக்க
நீயில்லை....!
படித்து பார்க்க
துடிக்கிறேன் நான்..